பெருந்தோட்டங்களை இராணுவத்தினர் வசம்கொண்டு வருவதற்கான முயற்சிகளை அனுமதிக்கப்போவதில்லை - வே.இராதாகிருஸ்ணன்
மலையக பெருந்தோட்டங்களை இராணுவத்தினர் வசம் கொண்டு வருவதற்கான முயற்சிகளை அனுமதிக்க போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சம்பள நிர்ணய சபை 1000 ரூபா விடயத்தில் தலையிட்டதனால் இன்று வித்தியாசமாக தோட்டதுறைமார் தொழிலாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் சூழல் உருவாகியுள்ளது.
ஹோல்டன் மற்றும் கந்தப்பளை தோட்டங்களில் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் தோட்டதுறைமார் வீதியில் இறங்கி போராடும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இதன் பிரதிபளிப்பாக தற்போது ஹய்போரஸ்ட் மாகுடுகல தோட்டத்தில் 6 இராணுவ வீரர்கள் தோட்ட நிர்வாகத்தை பொறுப்பேற்க தயாராவதாக அறிய முடிகின்றது.
இது குறித்து மகுடுகல தோட்ட நிர்வாகத்திடம் வினவியதற்கு தமக்கு அது குறித்துதெரியாது என்கின்றனர். இவ்வாறு இராணுவத்திடம் தோட்ட நிர்வாகத்தை ஒப்படைப்பது பூதாகரமானது.
கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவமயமாக்கலை கொண்டுவந்ததன் மூலமே யுத்தம் ஏற்பட்டது. ஆகவே தொழிலாலளர்களை நசுக்க கம்பனிகளும் ,அரசாங்கமும் முற்படுகிறதா? ஏன்ற சந்தேகமுள்ளது.
ஆகவே அரசாங்கம் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடின் மக்கள் போராட்டம் இடம்பெறும்.
தற்போதைய நிலையில் 1000 ரூபாவை கொடுத்து ஏனைய நலன்புரி விடயங்களில் கம்பனிகள் கை வைத்தால் மலையகத்தில் பாரிய தொழிற்சங்க போராட்டம் இடம்பெறும். இதன்போது அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri