அமெரிக்காவில் நடுவானில் பற்றியெரிந்த விமானம்! நால்வர் பலி - செய்திகளின் தொகுப்பு
அமெரிக்காவின் அட்லாண்டாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அட்லாண்டா நகரின், சாம்பிலீ கவுன்டி பகுதியில் உள்ள, தெகால்ப் - பீச்ட்ரீ விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 210 ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.
அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், நடுவானில் திடீரென தீப்பிடித்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து 15 தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்திற்கான காரணம் பற்றிய தகவல்கள் இதுவரை வெளிவராத நிலையில், இந்த விபத்துக் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தவுள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளுக்கு நாள் நிகழும் மாற்றங்கள்! இலங்கையை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் 1 மணி நேரம் முன்

பிரித்தானிய ஏரி ஒன்றில் மர்ம உயிரினம்... சிறுபிள்ளைகளுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் எச்சரிக்கை News Lankasri

உலகம் முழுவதும் வசூலில் புதிய சாதனை படைத்த கமல்ஹாசனின் விக்ரம்- போட்றா வெடிய கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

பிரபல நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டிக்கு இலங்கையில் இருந்து வந்த முக்கிய தகவல்! ஈழமக்கள் சார்பில் நன்றி News Lankasri
