மகிந்த மற்றும் ஷிரந்தியின் பரிதாப நிலை! உடன் இருக்க வேண்டிய கட்டாயத்தில் நாமல் ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவருடைய மனைவி ஷிரந்தி ராஜபக்ச ஆகியோர் நோய்வாய்ப்பட்டு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது மூத்த மகன் என்ற வகையில், நாமல் ராஜபக்சவே அவர்களைப் பராமரிக்க வேண்டும் என்று மகிந்த ராஜபக்சவின் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் வைத்து நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாமல் இன்னமும் குற்றவாளியல்ல..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைக்கும் கருத்துகளோ அல்லது அரசாங்கத்தின் நிலைப்பாடோ நீதிமன்றத்தின் தீர்மானத்தைத் தீர்மானிக்க முடியாது. ஒருவர் கொண்டிருக்கும் அரசியல் கருத்தின் அடிப்படையில் அவருக்கு எதிராக வேறுபாடு காட்டப்படவும் கூடாது.
மறுபுறம், நாமல் ராஜபக்ச இன்னமும் குற்றவாளியாக அறிவிக்கப்படவில்லை. அவர் ஒரு சந்தேகநபர் மாத்திரமே. இலங்கை அரசியலமைப்பு குற்றமற்றவர் என்ற அனுமானத்தைத் தெளிவாக உறுதிப்படுத்துகின்றது. அதன்படி, நீதிமன்றத்தினால் ஒருவர் குற்றவாளியாகத் தீர்மானிக்கப்படும் வரை அவர் குற்றமற்றவராகவே கருதப்பட வேண்டும்.

தற்போது நாமல் ராஜபக்ச 50 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் உள்ளார். அதுமட்டுமன்றி, விசாரணை நடவடிக்கைகளும் தற்போது நிறைவடைந்துள்ளன. வழக்கு விசாரணைக்காக விசேட மேல் நீதிமன்றமொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு நாமல் ராஜபக்சவுக்கு பிணை வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, நீதவானிடம் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி அறிவிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து எழுத்துமூல சமர்ப்பணங்களையும் பரிசீலிக்க வேண்டியிருப்பதால் இந்தத் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாகும் என நான் கருதுகின்றேன்.
நாமல் ராஜபக்சவின் பெற்றோர் தற்போது சுகயீனமடைந்து இக்கட்டானதொரு சூழ்நிலையில் இருக்கின்றனர். அவர்களின் மூத்த மகன் என்ற வகையில், அவர்களைப் பராமரிப்பதும் கவனித்துக் கொள்வதும் அவருக்குப் பொறுப்பான ஒரு விடயமாகும். இந்த மனிதாபிமானக் காரணியும் அரசியல் விடயங்களுக்கு அப்பால் முக்கியத்தும் வாய்ந்ததாகும்.
எனவே, இந்த அனைத்து விடயங்களையும், முக்கியமான நீதிமன்றத் தீர்ப்புக்களையும் கருத்திற்கொண்டு, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றத்தில் தனது வாதங்களை முன்வைத்தார். இது தொடர்பான தீர்ப்பு நவம்பர் மாதம் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri
பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியா இது, சமூக வலைதளங்களில் வலம்வரும் லேட்டஸ்ட் போட்டோ... எப்படி ஆகிட்டார் பாருங்க Cineulagam