போலி விசாவில் இத்தாலி செல்ல முயன்ற நபர்
போலியாக தயாரிக்கப்பட்ட இத்தாலி நாட்டின் வதிவிட விசாவை பயன்படுத்தி, துருக்கியின் இஸ்தன்புல் நகர் ஊடாக இத்தாலிக்கு செல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தேச எல்லை கட்டமைப்பு பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். புத்தளத்தை சேர்ந்த 58 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானத்தில் ஏறுவதற்காக சந்தேக நபர் சமர்ப்பித்த இத்தாலி வதிவிட விசாவை பரிசோதித்த விமான சேவை அதிகாரிகள், அது தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, கடவுச்சீட்டை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பியுள்ளனர்.
திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனையில் அந்த விசா அனுமதி போலியானது என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் சில காலம் இத்தாலியில் சாரதியாக தொழில் புரிந்து வந்தவர் எனவும் அவரது மனைவி பிள்ளைகள் இத்தாலியில் வசிப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நீண்டகாலத்திற்கு முன்னர் இலங்கை திரும்பிய இந்த நபரின் இத்தாலி வதிவிட விசா அனுமதி காலாவதியாகியுள்ளது. இதன் காரணமாக சந்தேக நபர் போலியான இத்தாலி வதிவிட விசாவை தயாரித்துள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்த சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையத்தின் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam
