புதுக்குடியிருப்பு வர்த்தக நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் நபரொருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு நகரில் இயங்கி வருகின்ற பிரபல வர்த்தக நிலையமொன்றில் காசாளராக கடமையாற்றி வரும் நபரே இவ்வாறு மயங்கி விழுந்துள்ளார்.
குறித்த நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தனிமையில் வைத்து அவருக்கான சிகிச்சைகள் இடம்பெறுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மை நாட்களாக புதுக்குடியிருப்பில் அதிவீரியமிக்க கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒரு மரக்கறி வியாபாரி இனங்காணப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பலர் தனிமைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவ்வாறு ஒருவர் அப்பகுதியில் மயங்கி விழுந்தமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri