குழந்தைகளுக்கான வாசனை திரவியத்தை திருடிய நபர் தற்கொலை
ராகமை பிரதேசத்தில் உள்ள சிறப்பு அங்காடிக்கு இன்று காலை சென்ற ஒருவர் பணத்தை செலுத்தாது எடுத்துச் சென்ற சில பொருட்கள் காரணமாக தற்காலை செய்துக்கொண்டுள்ளார்.
குழந்தைக்கு தேவையான வாசனை திரவியங்கள் சிலவற்றை அவர் பணம் செலுத்தாது அங்காடிக்குள் இருந்து எடுத்துச் சென்றுள்ளார்.
அருகில் இருந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் அந்த நபரை பிடிக்க முயற்சித்த போது, அவர் தனது கையில் இருந்த கத்தியால் சாரதியை குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தை பார்த்த மேலும் சிலர் சந்தேக நபரை விரட்டி சென்றுள்ளனர்.
அப்போது எவரையும் அருகில் வர வேண்டாம் எனவும் வந்தால், கழுத்தை அறுத்துக்கொள்வேன் எனக் கூறி, தனது கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளார்.
பின்னர் அருகில் இருந்த நபர்கள், அவரை ராகமை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அந்த நபர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி ராகமை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து ராகமை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam