பிரான்ஸ் ஜனாதிபதியின் கன்னத்தில் அறைந்த பொதுமகன்
பிரான்ஸ் ஜனாதிபதியின் கன்னத்தில் ஒருவர் அறைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தென்கிழக்கு பிரான்சுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் பொதுமக்களை சந்திக்க சென்ற போதே அதில் இருந்த ஒருவர் கன்னத்தில் அறைந்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவும் ஒரு காணொளியில், மக்ரோன் வேலன்ஸ் நகரத்திற்கு வெளியே டெய்ன்-எல் ஹெர்மிட்டேஜுக்கு மேற்கொண்ட ஒரு பயணத்தின் போது மக்களை சந்திக்கிறார்.
பாதுகாப்பு அதிகாரிகள் விரைவாக அந்த இடத்துக்கு செல்வதற்கு முன்னர் பச்சை நிற சட்டை அணிந்த ஒருவர் மக்ரோனை முகத்தில் அறைந்துள்ளார்.
இதனையடுத்து , ஜனாதிபதி அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுகிறார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதியை அறைந்த அந்த பொதுமகன் "டவுன் வித் மக்ரோன்-இஸ்ம்" Down with Mecron-ism என்று கூச்சலிட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் பின்னரும் சிறிது நேரத்தில் மக்ரோன் திரும்பி வந்து மீண்டும் பொதுமக்கள் கூட்டத்துடன் உரையாடியுள்ளார்.
இதேவேளை மெக்ரோனை தாக்கியவரின் நோக்கம் இதுவரை தெரியவில்லை என்று சர்வதேச
ஊடகங்கள் தெரிவித்துள்ளன.