ஒருவரை கொலை செய்து விட்டு தூக்கில் தொங்கிய நபர்!
இரண்டு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன், கொலை செய்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
எஹலியகொடை பத்பேரிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தர்ப்பத்தில் குறித்த இருவரும் மது போதையில் இருந்துள்ளனர்.
இதன்போது, ஒருவர் பொல்லு ஒன்றால் மற்றைய நபரை தாக்கியதில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, தாக்கிய நபர் வீட்டிற்கு சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட நபர் 45 வயதுடையவர் எனவும், தற்கொலை செய்துக் கொண்ட நபர் 54 வயதுடையவர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
