பெட்ரோலுக்கு இலஞ்சமாக மதுபானத்தை வழங்கிய நபர்
எரிபொருள் நெருக்கடியால் நாடளாவிய ரீதியில் மக்கள் பெரும் அல்லல்பட்டு வருகின்றனர்.
எரிபொருளை பதுக்குவதும், சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்றுவரும் சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.
மதுபானம் கொடுத்து பெட்ரோல் வாங்கிய நபர்
இந்த நிலையில், வர்த்தகர் ஒருவருக்கு 5 லீற்றர் பெட்ரோல் பெற்றுக் கொடுக்க, அவரிடமிருந்து 5 போத்தல் மதுபானம் பெற்றுக்கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரத்தினபுரி, இறக்குவானையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இறக்குவானை நகருக்கு சென்றிருந்த குறித்த நபர், தனது காருக்கு பெட்ரோல் பெற்றுக்கொள்ள எங்கும் திரிந்தும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்த நிலையில் சில இளைஞர்களைச் சந்தித்த குறித்த வர்த்தகர் அவர்களிடம் எங்கே பெட்ரோல் எடுக்கலாம் என விசாரித்துள்ளார்.
அதன்போது அந்த இளைஞர்கள் தமக்கு மதுபானம் வாங்கி தந்தால் பெட்ரோல் வாங்க உதவலாம் என கூறியுள்ளனர்.
குறித்த வர்த்தகரும் இரவு வெகுநேரமாகி விட்டதால் பெட்ரோலை பெற்றுக்கொள்ள மதுபானக்கடை ஒன்றிற்குச் சென்று ஐந்து மதுபான போத்தல்களை வாங்கி இளைஞர்களிடம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து வர்த்தகரை அழைத்துச் சென்று இளைஞர்கள் சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை செய்யும் நபரை சந்தித்து ஐந்து லீற்றர் பெட்ரோலை வாங்கி கொடுத்துள்ளனர்.

டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறியுள்ள கனி மொத்தமாக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam