உயிரிழந்த உறவினரின் உடலை காண்பிக்க கோரி பிணவறைக்கு அருகில் அச்சுறுத்தலில் ஈடுபட்ட நபர்
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த தனது உறவினரின் உடலை பார்க்க வேண்டும் எனக் கூறி மருத்துவர்கள் உட்பட வைத்தியசாலை ஊழியர்களை அச்சுறுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை வைத்தியசாலையின் பிணவறைக்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. களுத்துறை வைத்தியசாலையின் பிணவறையில் அதிகளவான சடலங்கள் குவிந்து கிடந்துள்ளன.
சம்பந்தப்பட்ட நபர், தனது உறவினரின் உடலை பார்க்க வேண்டும் எனக் கூறி, சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டோரை அச்சுறுத்தியுள்ளார்.
இது குறித்து வைத்தியசாலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.




