காணி அபகரிப்புகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏறாவூர் மக்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி மாபியாக்களினால் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புகளைக் கண்டித்து ஏறாவூர்,புன்னக்குடா பிரதேசத்தில் இன்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் பொதுமக்களின் காணிகளைச் சட்டவிரோதமான முறையில் அபகரிக்கும் காணி மாபியாக்களின் செயற்பாடுகளைக் கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, கிரான், ஏறாவூர்பற்று-செங்கலடி, ஆகிய பிரிவுகளில் உள்ள அரச காணிகளுடன் இணைந்து பொது மக்களின் மற்றும் வெளிநாடுகளிலுள்ள காணிகளை ஒரு குழுவினர் விற்பனை செய்து வருவதாகவும், அதற்கு அதிகாரிகள் துணை போவதையும் கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக இப்பகுதியில் உள்ள காணிகளை அரச அதிகாரிகளுக்குப் பணத்தினைக் கொடுத்து ஒரு குழுவினர் நீண்ட காலமாக இவ்வாறான காணி அபகரிப்பினை முன்னெடுத்து வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் தமிழ் மக்களின் காணிகள் நீண்ட காலமாக அபகரிக்கப்பட்டு இவ்வாறு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், இது தொடர்பில் ஜனாதிபதி முறையான விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமக்கு வழங்கப்பட்ட காணிகள் இவ்வாறு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.















கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
