நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு திறந்த பொருளாதாரமே காரணம்
நாட்டின் கடந்த கால அரசாங்கங்கள் திறந்த பொருளாதார கொள்கை ஊடாக அரச நிறுவனங்களை விற்பனை செய்து, அனைத்தையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலைமைக்கு நாட்டை தள்ளியதன் பிரதிபனை தற்போதைய அரசாங்கம் அனுபவிக்க நேரிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கொழும்பு நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இவை அனைத்தையும் அரசு என்ற வகையில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இல்லை என்று எமக்கு கூற முடியாது. மோசமான நிலைமையை மிகவும் சிறந்த நிலைமையான முகாமைத்துவம் செய்வது தொடர்பான பொறுப்பு அரசாங்கத்திற்குரியது.
அரச நிறுவனங்களை தனியார் துறையினருக்கு விற்பனை செய்து, திறந்த பொருளாதாரம் என்று கூறி கதவுகளை திறந்து, நாங்கள் கடதாசியில் சொருகும் ஊக்குகளை கூட இறக்குமதி செய்யும் நிலைமை நாட்டை மாற்றியது யார் என்ற விடயத்தை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
அது ஒரு அரசாங்கமாக இல்லாமல் இருக்கலாம். சில அரசாங்கங்களாகவும் இருக்கலாம்.இவற்றுக்கு அடிப்படை காரணமாக இருந்தவர்கள் யார் என்று பார்த்தால், தற்போது கோஷம் போட்டுக்கொண்டிருப்போரின் தந்தைகள், பாட்டன்மார்கள்.
இவர்களே திறந்த பொருளாதார கொள்கையை ஆரம்பித்து வைத்தனர். அதன் பிரதிபனை நாம் அனுபவிக்க நேரிட்டுள்ளது எனவும் அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam