‘‘ஈழத்தமிழர்கள் மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் இனப்படுகொலை’’ (VIDEO)
2009 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக ஈழத்தமிழ் மக்களை அழித்து கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை பௌத்த பேரினவாத அரசு முன்னெடுத்து வருவதாக உலக தமிழர் இயக்கத்தின் மக்கள் தொடர்பாளர் நிசா பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை வளாகத்தில் தற்போது இடம்பெற்று வரும் 14வது சிறுபான்மை மன்ற கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஈழத்தமிழர்கள் வலுக்கட்டாயமாக சிறுபான்மை இனமாக ஆக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இங்கு விவாதிக்கப்படவுள்ளது.
அதாவது,2009 ஆம் ஆண்டில் உச்சக்கட்ட போரின் போது பௌத்த பேரினவாத அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக சிறுபான்மை மக்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.
அன்று தொடக்கம் இன்று வரை தொடர்ச்சியாக தமிழ் மக்களை அழித்து கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை பௌத்த பேரினவாத அரசு முன்னெடுத்து வருகின்றதாகவும் தெரிவித்துள்ளார்.





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
