ஆக்கிரமிப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்: திலீபன் ஆவேசம்

Mannar Mullaitivu Parliament of Sri Lanka Vavuniya
By Shan Jun 14, 2023 10:20 PM GMT
Report

 "ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்றால் அதை எனக்கு அறியத்தரும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கை எடுப்பேன்" என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரத்தில் உள்ள சில முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (14.06.2023) இடம்பெற்ற கலந்துரையாடலின பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

வர்த்தக சங்கம், அங்காடி வியாபாரிகள், நகரசபை, பிரதேச சபை, அரச அதிகாரிகள் உட்பட அனைவரையும் இணைத்து கொண்டு வர்த்தகர்கள் எதிர்நோக்ககூடிய பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டு முடிவுகளும் எடுக்கப்பட்டிருந்தது.

ஆக்கிரமிப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்: திலீபன் ஆவேசம் | The Occupations Will Be Put To An End

உள்ளூர் சேவைகள்

அதில் நீண்ட காலமாக இருக்கக்கூடிய வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு வவுனியாவில் உள்ள உள்ளூர் சேவைகள் அதாவது தனியார், அரச பேருந்துகள் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு 5 நிமிடம் நின்று செல்வது என கலந்துரையாடப்பட்டிருக்கிறது.

மேலதிக நடவடிக்கைகளுக்காக ஆளுநருக்கு தெரியப்படுத்தி அனுமதி பெற்ற பின்னர் நடைமுறைப்படுத்தப்படும்.

அன்றாட வியாபாரிகளது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அடையாள அட்டை வழங்கி அவர்களையும் வர்த்தக சங்கத்தோடு இணைத்து பயணிக்க வைப்பதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டது.

ஆக்கிரமிப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்: திலீபன் ஆவேசம் | The Occupations Will Be Put To An End

வர்த்தக சங்கங்களுக்கு இருக்க கூடிய உரிமை மாற்ற பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டிருக்கிறது, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான இடங்களில் தற்காலிக கொட்டகைகள் அமைத்து அதில் பயன்பெற கூடிய வகையில் சில விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

தொடர்ச்சியாக இவ்வாறாக மாதம் , மாதம் கலந்துரையாடலினை மேற்கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர்

இதேவேளை ஏனைய மாவட்டங்களில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தப்பட்டிருக்கிறது. வவுனியா மாவட்டத்தில் இல்லை.

இது சம்பந்தமாக முச்சக்கர வண்டிகள் சங்கத்தின் தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. விரைவாக அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி படிப்படியாக இந்த விடயங்களை நடைமுறைப்படுத்துமாறும் அதேநேரம் ஆரம்ப கட்டணம் 150 ரூபாயும் கிலோமீற்றருக்கு 100 ரூபாயும் என்கிற வகையில் அறவிடப்படுகிறது.

ஆக்கிரமிப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்: திலீபன் ஆவேசம் | The Occupations Will Be Put To An End

இது அதிக தொகை என பொதுமக்களாலும், சமூக வலைதளங்கள் ஊடாகவும், அறிந்து கொண்டேன். அதிலும் மாற்றம் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்களில் ஆக்கிரமிப்பாளர்களது ஆக்கிரமிப்பு தொடர்கிறது. இது தொடர்பாக பொலிஸிற்கு தொலைபேசியில் தகவலை தெரியப்படுத்தினால் நேராக வந்து முறைப்பாட்டினை பதிவு செய்யுமாறு கூறுகிறார்கள்.

உரியவர் வெளி மாவட்டமாக இருந்தால் அவர்கள் அங்கிருந்து வந்து முறைப்பாடு பதிவு செய்ய முன்னர் கட்டிடம் கட்டப்பட்டிருக்கும். அல்லது வேலி அடைக்கப்பட்டிருக்கும்.

தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கேட்டிருந்தேன் . சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரும் அதற்கு இணங்கியுள்ளார்.

ஊடகவியலாளர்களும் இது சம்பந்தமாக, எங்கும் ஆக்கிரமிப்புகள் நடைபெற்றால் எனக்கு அறியத் தாருங்கள். நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW       


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US