இலங்கை மக்களுக்கு மீண்டும் அச்சுறுத்தலாக மாறிவரும் டெங்கு நோய் தொற்று
இலங்கையில் 2023 இல் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 60,000 ஐ கடந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய தொற்று நோயியல் பிரிவு வழங்கிய தகவலின் படி, 2023 ஜனவரி முதல் - ஜுலை 19 ஆம் திகதிவரை நாட்டில், மொத்தம் 60,136 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய அதிகபட்சமான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
30,000 தொற்றுகள்
மேலும், மேல் மாகாணத்தில் கிட்டத்தட்ட 30,000 தொற்றுகள் பதிவாகியுள்ளன எனவும், இது மாகாணங்களின் அடிப்படையில் மிக அதிகம் எனவும் கூறப்படுகிறது.
டெங்கு நோய் பரவும் இடங்கள் அதிகமாக காணப்படும் 43 அதிக ஆபத்துள்ள பகுதிகளை தொற்றுநோயியல் பிரிவு அடையாளம் கண்டுள்ளது.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் 3,446 டெங்கு தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும், இதற்கிடையில், ஜனவரி 2023 முதல் மொத்தம் 38 இறப்புகள் பதிவாகியுள்ளன எனவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 18 மணி நேரம் முன்

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
