அடுத்த பாப்பரசர் ஆபிரிக்கராக இருக்க வேண்டும்! வலுப்பெறும் வலியுறுத்தல்
அடுத்த பாப்பரசராக யார் வருவார் என்பதற்கான கணிப்புகள் வேகமாக வெளியாகிவரும் நிலையில், அவர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.
ஆபிரிக்கக் கண்டத்தின் கத்தோலிக்க மக்கள் தொகை வேறு எங்கும் இல்லாத அளவுக்கு வேகமாக விரிவடைந்து வருகிறது, ஆப்பிரிக்காவிலிருந்து குறைந்தது மூன்று பாப்பரசர்கள் பதவியில் இருந்திந்தாலும், கடைசியாக இருந்த பாப்பரசர் கெலாசியஸ் I, 1,500 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார்.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவருக்கு வாக்களிக்கும் கர்த்தினால்கள் - கார்டினல்-எலெக்டர்கள்(கர்த்தினால் தெரிவா ளர்கள்)என்று அழைக்கப்படுபவர்கள்.
முடிவெடுப்பதில் செல்வாக்கு
பிரான்சிஸின் வாரிசைத் தேர்ந்தெடுக்க, எதிர்காலத்தில், வத்திக்கானில் கூடும்போது, இந்த உண்மைகள் அவர்களின் முடிவெடுப்பதில் செல்வாக்கு செலுத்துமா? என்று கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தநிலையில், ஒரு ஆப்பிரிக்க பாப்பரசர் தெரிவாவது மிகவும் நன்றாக இருக்கும் என்று தாம் நினைப்பதாக, நைஜீரிய கத்தோலிக்க அருட் தந்தையும், சிகாகோவில் உள்ள டிபால் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியருமான ஃபாதர் ஸ்டான் சூ இலோ சர்வதேச ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார் திருச்சபையின் தலைமை உலகளாவிய சபையின் அமைப்பை சிறப்பாக பிரதிபலிக்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டுள்ளார்.
ஆனால், கர்த்தினால்கள், ஏற்கனவே செல்வாக்கு மிக்க குரலாக இருக்கும் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டூள்ளார்.
இதில் சவால் என்னவென்றால், வத்திக்கானில் இன்று எந்த மூத்த ஆப்பிரிக்க மதகுருமார்களும் எந்த முக்கிய பதவியையும் வகிக்கவில்லை என்பது முக்கிய பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரான்சிஸ் தனது பதவிக் காலத்தில் ஆப்பிரிக்காவில் 10 நாடுகளுக்குச் சென்றார் - அந்தக் காலத்தில் கண்டத்தில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்தது.
அவர்கள் 2022 இல் 272 மில்லியனிலிருந்து 2023 இல் 281 மில்லியனாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
