சென்னை அணியின் அடுத்த தலைமை பொறுப்பு: காசி விஸ்வநாதன் விளக்கம்
சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் தலைமை தொடர்பில் பயிற்சியாளரே தீர்மானிப்பார் என அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை அணியின் தற்போதைய தலைவர் டோனிக்கு பிறகான தலைமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
17ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 22ஆம் திகதி சென்னை சேப்பாக்கத்தில் ஆரம்பமாகவுள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
கடைசி தொடர்
சென்னை அணியின் தலைவர் 42 வயதான டோனிக்கு இதுவே கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அவருக்கு பின்னல் சென்னை அணியை வழிநடத்தப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில்,
தலைவர், துணை தலைவர் நியமனம் பற்றி பேச வேண்டாம். அதை பயிற்சியாளர் மற்றும் தற்போதைய தலைவர் ஆகியோர் தீர்மானிப்பார்கள்.
ஆகவே முடிவு தொடர்பில் என்னிடம் தகவல் கூறிய பிறகு தெரிவிக்கின்றேன் . நடப்பு ஐ.பி.எல். தொடரில் நாக்-அவுட் சுற்றை எட்டுவது தான் முதல் இலக்கு. அதில்தான் எங்களது கவனம் இருக்கும்.'' என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |