பாடசாலை தவணை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
இந்த வருடத்திற்கான புதிய பாடசாலை தவணை இன்று (27) ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு (Ministry of Education) அறிவித்துள்ளது.
முதல் பாடசாலை தவணை மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டு, முதல் கட்டம் மார்ச் 14ஆம் திகதி முடிவடைகிறது.
முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையிலும் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் மே 9 ஆம் திகதி வரையிலும் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மீள்திருத்தங்களை சமர்ப்பிக்கும் சந்தர்ப்பம்
இதேவேளை, ஐந்தாம் தர புலமைப்பரிசில் மதிப்பெண்கள் தொடர்பான மீள்திருத்தங்களை சமர்ப்பிக்கும் சந்தர்ப்பம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஒன்லைன் முறையின் மூலம் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் கடந்த வியாழக்கிழமை வெளியாகியிருந்த நிலையில், பெறுபேறுகளின் மீள் திருததத்திற்கு பெப்ரவரி 06ஆம் திகதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |