மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா பெறுப்பேற்பு (Photos)
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா இன்று (19.01.2023) காலை 10 மணியளவில் தனது கடமைகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பெறுப்பேற்றார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட செயலாளராக இருந்த கலாமதி பத்மராஜா அரசியல் காற்ப்புணர்ச்சி காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இன்று (19.01.2023) புதிதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டு மாதவனை மயிலத்தமடு பகுதிகளில் இடம்பெற்ற மேய்ச்சல் தரை விவகாரங்களில் மிகவும் துணிகரமாக தனது செயற்பாடுகளை மேற்கொண்டதன் காரணமாக இவர் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக இடமாற்றம் பெற்றுச் சென்றதை அடுத்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கணபதிபிள்ளை கருணாகரன் நியமிக்கப்பட்டிருந்தார்.
அதிகாரிகள் வாழ்த்து
கடந்த சில வாரங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்க அதிபர் பிரச்சினை இழுபரி நிலையில் இருந்த நிலையில் நேற்று (18.01.2023) பிரதமர் முன்னிலையில் நியமனம் பெற்றுகொண்டார்.
இதன்போது புதிய அரசாங்க அதிபருக்கு மாவட்ட செயலக அதிகாரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன், மட்டக்களப்பு மாவட்ட முழுநேர ஊடகவியலாளர் சார்பாக மாவட்டத்தில் இடம்பெறும் பல அதிகார துஷ்பிரயோகங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தொடர்ச்சியாக துணிச்சல் மிக்க ஒரு மாவட்ட செயலாளராக கடமை துணிகரமாக செய்ய வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட முழுநேர ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
