நாட்டை உலுக்கிய நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - உயிரிழந்த அதிகாரிகளுக்கு அரசு வெளியிட்ட திட்டம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நட்டஈடு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.
உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபா என்பது ஆரம்பக்கட்ட நிவாரணக் கொடுப்பனவு மட்டுமே என்று சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு விளக்கம் கொடுத்துள்ளார்.
உயிரிழந்த அதிகாரிகளின் அனைத்து இறுதிக்கிரியைகளும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் முழுமையான செலவிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ள என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான ஏனைய உதவிகளை வழங்குவதற்கும் திணைக்களம் உரிய கவனம் செலுத்தி வருவதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாரிகளின் தற்போதைய நிலைமை
இந்த மோதலில் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் அதிகாரிகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பேச்சாளர், "தற்போது 7 அதிகாரிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் மூவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நட்டஈடு மற்றும் இதர உதவிகள் குறித்தும் சிறைச்சாலைகள் திணைக்களம் கவனம் செலுத்தி வருகின்றது என்றார்.
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri