தேசிய அரசுக்கு அப்பால் தேசிய வேலைத்திட்டமே அவசியம்! ரணில் சுட்டிக்காட்டு
"தேசிய அரசு என்பதற்கு அப்பால், இணக்கப்பாட்டுடனான தேசிய வேலைத்திட்டமொன்றே தற்போது அவசியம் என முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு, கிருலப்பனைப் பகுதியில் இன்று (13) நடைபெற்ற கட்சி மறுசீரமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டு, பாரியதொரு அலைக்குள் சிக்கியுள்ளது. அதுமட்டுமல்ல எதிர்வரும் ஜுன் மாதம் கடன் செலுத்த வேண்டியும் உள்ளது.
எனவே, தேசிய அரசு என்பதற்கு அப்பால், இணக்கப்பாட்டுடனான தேசிய வேலைத்திட்டமொன்றே தற்போது அவசியம்.
சர்வகட்சி மாநாட்டுக்கு முன்னர், சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை அரசால்
வெளியிடப்படும் எனவும் நம்புகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam