முகப்புத்தகத்தின் பெயர் மாற்றப்படுகிறதா?
சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக் இன்க் (FB.O) அடுத்த வாரம் தன்னை ஒரு புதிய தர அடையாளத்துடன்(Brand) மறுபெயரிட திட்டமிட்டுள்ளது.
நிறுவனத்துடன் நேரடி தொடர்பைக் கொண்ட ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டி வெர்ஜ் இணையத்தளம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸூக்கர்பெர்க் அக்டோபர் 28 அன்று நிறுவனத்தின் வருடாந்த இணைப்பு மாநாட்டில் பெயர் மாற்றம் பற்றி பேச திட்டமிட்டுள்ளார் என்றும் வெர்ஜ் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் விடயம் தொடர்பில் பேஸ்புக் நிறுவனம், எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. நிறுவனத்தின் வணிக நடைமுறைகள் மீது அமெரிக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
மறுபெயரிடுதல் செயற்பாடு,பேஸ்புக்கின் சமூக ஊடக பயன்பாட்டை ஒரு தாய்
நிறுவனத்தின் கீழ் உள்ள பல தயாரிப்புகளில் ஒன்றாக நிலைப்படுத்தும். அது
Instagram, WhatsApp, Oculus மற்றும் பல போன்ற குழுக்களையும் மேற்பார்வையிடும்
என்று வெர்ஜ் தெரிவித்துள்ளது.
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam