மட்டக்களப்பில் மகனை காப்பாற்ற போராடிய தாய் பரிதாபமாக படுகொலை
மட்டக்களப்பு, கல்குடா பிரதேசத்தில் தாக்குதல் ஒன்றில் மகனை காப்பாற்ற முயற்சித்த தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மகனுக்கும் தாயின் சகோதரியின் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற தாயின் தலையில் தடியால் தலையில் தாக்குதலுக்குள்ளாகியதில் உயிரிழந்துள்ளார்.
உறவினர்களுக்குள் மோதல்
தாய் இடையே சென்றிருக்கவில்லை என்றால் அவரது மகன் தாக்கப்பட்டு உயிரிழந்திருப்பார். எனினும் மகனை காப்பாற்றுவதற்காக சென்று உயிரிழந்துள்ளார்.
கல்குடா பட்டியடிச்சேன பிரதேசத்தில் நேற்று முன்தினம் இந்த துரதிஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெண் மரணம்
உயிரிழந்த பெண்ணின் சகோதரியின் மகனால் குறித்த பெண் தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பிராசா காந்திமதி என்ற 62 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த மரணத்தில் சந்தேகத்தின் பேரில் பெண்ணின் சகோதரியின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆதிச்சேனை பகுதியை சேர்ந்த 40 வயதடைய கோகுல ராஜ் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
