பிள்ளைகளை கொடூரமாக கொலை செய்த தாயார் குற்றமற்றவரென நீதிமன்றம் தீர்ப்பளிப்பு
அவுஸ்திரேலியா - பெர்த் நகரில் தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்த தாயார் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த கொலையை மேற்கொண்ட தாயார் கடுமையான மனநல பாதிப்புக்கு உள்ளாகியிருந்த சந்தர்ப்பத்திலேயே இக்கொலைகளைச் செய்துள்ளதாக தெரிவித்து 40 வயதான தாயார் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்படுவதாக மேற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெர்த்தின் வடக்குப் பகுதியிலுள்ள வீட்டில் வசித்துவந்த Milka Djurasovic என்ற பெண், தனது 10 வயது மற்றும் 6 வயது மகள்களை கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியிருந்தார்.
வீட்டிலிருந்து வெளியேற முன்னர் காணொளி ஒன்றைப் பதிவு செய்து இச்சம்பவத்தையிட்டு தான் வருந்துவதாகவும் தனது வாழ்க்கையையும் முடித்துக்கொள்ளப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,சம்பவம் இடம்பெற்று இரு மணி நேரங்களின் பின்னர் வாகன தரிப்பிடமொன்றில் வைத்து காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டு வழக்கு விசாரணை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது.
சந்தேகநபரை குறித்த சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக கருத முடியவில்லை எனவும், மனநல கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் முடிவில் நீதிபதி அறிவித்து குறித்த பெண்ணை விடுதலை செய்துள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 6 நாட்கள் முன்
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam