யாழில் சிசுவை உயிருடன் புதைத்த தாய் தொடர்பில் வெளியான தகவல்
யாழ்ப்பாணம் – மட்டுவில் வடக்கு பகுதியில் பிறந்து ஒரு நாளேயான சிசுவை உயிருடன் புதைத்த சிசுவின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிசுவின் தாய் கோவிட் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரை சாவகச்சேரி நீதவான் முன்னிலையில் நாளை (03) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மட்டுவில் வடக்கு பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி பிரசவத்திற்கு பின்னர், வீட்டின் பின்புறத்தில் சிசு புதைக்கப்பட்டதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய சிசு பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்தது.
இவ்வாறு மீட்கப்பட்ட சிசு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
