குருந்தூர் மலையினை பார்வையிட படை அதிகாரிகளுடன் சென்ற தேரர்கள்
குருந்தூர் மலையினை படை அதிகாரிகளுடன் சென்று பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட பௌத்த மதகுருமார் பார்வையிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படும் குருந்தூர் மலைக்கு பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட பௌத்த மதகுருமார்கள் படை அதிகாரிகளுடன் நேற்று மாலை சென்று பார்வையிட்டுள்ளார்.
குறித்த மலை அடிவார பகுதியில் பொலிஸார் படையினர் கடமைகளில் நின்ற போதும் எந்தவித தடையும் இன்றி தேரர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அதேவேளை அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கான அனுமதி பொலிஸாரால் மறுக்கப்பட்டுள்ளதுடன் ஊடகவியலாளர்கள் பதிவிற்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
குருந்தூர் மலையினை பார்வையிட்டு வந்த தேரர்களை படம் எடுக்க வேண்டாம் என்று அங்கு கடமையில் நின்ற பொலிஸாரால் ஊடகவியலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் குருந்தூர் மலைக்கு அருகில் உள்ள குருந்தூர் குளமும் பார்வையிடப்பட்டுள்ளது.




Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri