பிரித்தானியாவில் மாயமான சகோதரர்கள்: பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்
பிரித்தானியாவில் இரண்டு சகோதர்கள் காணாமல் போன நிலையில் அவர்களை தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவில் மேற்கு யார்க்ஷயரின்(West Yorkshire) லிவர்செட்ஜ் (Liversedge) பகுதியை சேர்ந்த இரண்டு சகோதர்கள் கடந்த திங்கட்கிழமை(12) வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளனர்.
இதன்போது, 13 வயதுடைய யூசப் அகமது(Yousuf Ahmad) மற்றும் 10 வயதுடைய முகமது அஹ்மத்(Muhammad Ahmad)என்ற இரண்டு சிறுவர்களே காணமல் போயுள்ளார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில், பொலிஸாரின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதுடன், காணாமல் போன சகோதர்கள் இருவரும் ஒன்றாக இருக்கலாம் என்று நம்புவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
13 வயது சிறுவனான யூசப் சுமார் 5 அடி 6 அங்குலம் உயரமுடையவர் என்றும் அவர் கடைசியாக ஸ்காட் கிரே ஹூடி (Scott grey hoodie), நார்த் ஃபேஸ் கால்சட்டை(North Face trousers) மற்றும் கண்ணாடி அணிந்திருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அத்துடன், 10 வயது சிறுவனான முகமது சுமார் 4 அடி 7 அங்குலம் உயரமுடையவர் என்றும் கருப்பு ஹூடி(black hoodie) சாம்பல் நிற டிராக்சூட் பாட்டம்ஸ்(grey tracksuit bottoms) அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[8Y0SSJT ]
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam
