ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இந்தியாவில்!
கொழும்புத் துறைமுக கிழக்கு முனையம் இன்று பேசு பொருளாக மாறிவிட்டது. பௌத்த செல்வாக்கு ஆதரவின் மூலம் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் அதற்கு ஆதரவு கொடுத்தவர்கள்களின் குறிப்பாக பௌத்த பிக்குகளின், முன்னணி சிவில் சமூக பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கூட கவனத்தில் கொள்ளாது ஒரு தலைபட்சமாக ஜனாதிபதியும் அவரை சூழவுள்ளவர்களும் செயற்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உதய கம்பன்பில இந்த அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அவரும் மாறுபட்ட கருத்தை கிழக்கு முனையம் விடயத்தில் கொண்டுள்ளதை அவருடை ஊடக கருத்துக்களை நோக்கும் போது புலப்படுகிறது.
பிரேமனாத் ஶ்ரீ தொலவத்தவின் டி.யு.குணசேகரவின் கருத்துக்களும் ஜனாதிபதியின் நிலைப்பாட்டிற்கு மாற்றமாக உள்ளது. இதன் மூலம் அரசாங்கத்திற்குள் இரண்டு பிரிவுகளும் இரண்டு கருத்துக்களும் இருக்கின்றன.
ஜனாதிபதியின் ஒரு தலைபட்சமான செயற்பாடுகளினால் இன்று இரண்டு பிரிவுகள் உருவாகி இருக்கின்றன.
போலியாக அரசாங்கத்தில் இருந்து கொண்டு கிழக்கு முனைய விவகாரத்தை எதிர்கின்றனர்.
உண்மையில் எதிர்ப்பதாக இருந்தால் அரசாங்கதை விட்டும் வெளியேறி சுயாதீனமாக செயற்பட்டு காட்டுங்கள் என்று போலியாக குரல் கொடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சவால் விடுகிறேன் என்று தெரிவித்த அவர், பஸ்ஸுக்குள் இருந்து கொண்டு பஸ்ஸை தள்ளாமல் பஸ்ஸிற்குள் இருந்து கீழே இறங்கி பஸ்ஸை தள்ளுங்கள் என்று கூறினார்.
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இன்று இந்தியாவில் இருக்கிறார்.
அவரை இலங்கைக்கு அழைத்து வர இந்த அரசாங்கம் கவனமும் முக்கியத்துவமும் வழங்குவதாக இல்லை. இதற்கு பின்னால் வெளிப்படுத்த முடியாத பாரிய இரகசியம் ஒன்று இருக்கிறது.
வெளிப்படுத்த முடியாத அளவுக்கு ஒன்றும் இல்லையெனில் மக்களுக்கு வாக்குறுதியளித்த பிரகாரம் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடியுங்கள். இந்த விடயம் குறித்து அரசாங்கத்திற்கு பாரிய பொறுப்புள்ளது.
கொரோனாவை வைத்து பலர் கப்பம் எடுத்து உழைக்கின்றனர். வெளிநாட்டு தொழிலாளிகளை மீள அழைத்து வரும் விடயத்தில் இடம்பெறும் ஊழல் குறித்து நாமல் ராஜபக்ஷ வெளியில் வந்து கூறினார்.
அவர் கூறிய விதத்தில் இன்று ஒன்றும் இடம்பெற்றதாக இல்லை. சர்வதேச அளவில் தொழிலாளிகளை அழைத்துவரும் செயன்முறையில் இலங்கைக்கு வரவுள்ள விமான டிக்கட்டின் விலை தான் மிக அதிகம்.
தனிமைப்படுத்தலுக்கான அறைக்கூலி மட்டும் 185000 ரூபாவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோக உணவு ஏனைய தேவைகளுக்கு புறம்பாக அறவிடுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
