இலங்கை தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை
இலங்கையில் நீதியை உறுதி செய்ய அமெரிக்க அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க மாளிகை வெளியுறவு குழு கோரிக்கை விடுத்துள்ளது.
எந்தவொரு சுதந்திரத்திற்கும் ஊடகச் சுதந்திரம் ஒரு அடிப்படைக் கொள்கையாகும்.அதேபோல் அட்டூழியங்களைச் செய்பவர்களுக்கு பொறுப்புக்கூறல் என்றும் வெள்ளை மாளிகையின் வெளியுறவு குழு ட்வீட் செய்துள்ளது.
இலங்கையில் ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்கள் நீதியில் இருந்து தப்பிக்கொள்வது,ஜனநாயகம் மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் வெள்ளை மாளிகையின் வெளியுறவு குழு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் மனித உரிமைகள் மற்றும் இலங்கையில் நீதிக்கான ஆதரவு விடயங்களில் அமெரிக்கா தனது தலைமைப்பங்கை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என்று வெள்ளை மாளிகையின் வெளியுறவு குழு ட்வீட் செய்துள்ளது.
கொல்லப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க எழுதிய கட்டுரைக்கு பதிலளிக்கும் வகையில் வெள்ளை மாளிகையின் வெளியுறவுக் குழு ட்வீட் செய்துள்ளது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
