23 மணி நேரமும் சிறை அறையில்..! சிறைச்சாலைகளில் திடீரென வெடித்த கலவரத்திற்கான காரணத்தை வெளியிட்ட அதிகாரி
நாட்டில் சில முக்கிய சிறைச்சாலைகளில் இடம்பெற்ற கலவரங்களுக்கு சிறைகளில் காணப்படும் இடப்பற்றாக்குறை மற்றும் போதைப்பொருட்கள் சிறைக்குள் நுழைவதை தடுக்கும் நடவடிக்கையே காரணமாக இருக்கலாம் என முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் பல சிறைச்சாலைகளில் ஏற்பட்ட கலவரங்கள் குறித்து தனது கருத்துக்களை தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
நெரிசலால் ஏற்படும் சிரமம்
அதாவது நீர்கொழும்பில் சிறைச்சாலையில் சுமார் 46,000 கைதிகள் என்ற அதிக அடர்த்தி காணப்படுகின்றது. இந்த நெரிசலால் ஏற்படும் சிரமம் பிரச்சினைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

நீண்ட காலமாக விசாரணைக் கைதிகளாக இருப்பவர்களுக்கு இது சற்று கடினமானது. மேலும், சிறைகளில் இடப்பற்றாக்குறை காரணமாக வசதிகள் குறைக்கப்படலாம். இந்த வசதிக் குறைப்பும், போதைப்பொருட்கள் சிறைக்குள் நுழைவதை தடுக்கும் அதிகாரிகள் எடுக்கும் முயற்சிகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
'ஒரே நேரத்தில் மூன்று அல்லது நான்கு சிறைச்சாலைகளில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்வது இதுவே முதல் முறை.
மோதல்கள் உருவாகும் காரணம்
"தற்போது, குற்றவாளிகள் 24 மணி நேரத்தில் 23 மணி நேரமும் சிறை அறையிலேயே இருக்க வேண்டும். அவர்கள் ஒரு மணி நேரம் மாதிரமே வெளியே விடப்படுகிறார்கள். இது மிகவும் கடினமான பணி.
மேலும், வெளியே அழைத்துச்செல்லப்பட்டால், சிறை அதிகாரியின் கீழ் சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அவர்கள் எங்கு சென்றாலும் பாதுகாப்பின் கீழ் செல்கின்றனர்.
இதன் காரணமாக ஏற்படும் நெருக்கடி காரணமாக இவ்வாறான மோதல்கள் உருவாகுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.