கனடா வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை
கனடாவில் கோவிட் 5 ஆம் அலை பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் பொது மக்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் கோவிட் பரவல் மீண்டும் உச்சம் பெற தொடங்கியுள்ளதுடன்,கனடாவில் பாதிப்புகள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில்,கனடா எதிர்கொள்ளும் சுகாதார நெருக்கடி குறித்து அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விளக்கமளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
"தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருப்பவர்களால் மக்களும், சுகாதாரப் பணியாளர்களும் விரக்தியடைந்துள்ளனர். கோவிட் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுப்பவர்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.