இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை! முக்கிய தீர்மானம் எடுக்கவுள்ள கோட்டபாய
அமைச்சரவையின் விசேட கூட்டம் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த விசேட அமைச்சரவை கூட்டத்தில், சீமெந்து, பால்மா மற்றும் எரிவாயு விலையை அதிகரிப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை தொடர்பில் அங்கு கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அமைச்சரவை கூட்டம் ஒன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் (Mahinda Rajapaksa) தலைமையில் சூம் தொழில்நுட்பம் ஊடாக நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. எனினும் அந்த கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவில்லை என அவர் குறிப்பிடப்படுகிறது.
சீமெந்து, பால் மா மற்றும் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை முன்வைத்துள்ள யோசனை, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் (Bandula Gunawardane) கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த விடயம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 14 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
