இலங்கை பொலிஸாரால் தீவிரமாக தேடப்பட்ட முக்கிய குற்றவாளி வெளிநாட்டில் மரணம்
இலங்கை பொலிஸாரினால் தேடப்படடு வந்த முக்கிய சந்தேகநபர் டுபாயில் உயிரிழந்துள்ளார். கைது செய்வதற்காக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த பாரிய குற்ற செயல்களுக்கு தொடர்புடையவர் என கருதப்படும் கெசெல்வத்தை தினுக என்பவர் உயிரிழந்துள்ளார்.
டுபாயில் இடம்பெற்ற விருந்தின் போது ஏற்பாடு மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த தகவலை இராஜதந்திர ரீதியில் உறுதி செய்வதற்காக தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டுபாயில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் வலையமைப்பை இயக்கிய கெசெல்வத்தை தினுக, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்டுள்ளார்.
அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்த பின்னர் கெசெல்வத்தை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வெள்ளைக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 21 மணி நேரம் முன்
தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்பட்ட விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri