ஏறாவூரில் சிறுமிக்குச் சூடு வைத்த சிறிய தந்தைக்கு விளக்கமறியல்
ஏறாவூர் பொலிஸ் பிரிவு மிச்நகர் கிராமத்தில் தனது மனைவியின் முதல் கணவரது 6 வயதான பெண் குழந்தைக்கு சூடு வைத்த குற்றச்சாட்டில் அப்பெண்ணின் 25 வயதான இரண்டாவது கணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் முகத்தில் கரண்டியை சூடேற்றி சூடு வைத்த அடையாளங்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது பெப்ரவரி 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரால் மீட்கப்பட்ட சூடு வைக்கப்பட்டதாகக் கருதப்படும் சிறுமி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 20 மணி நேரம் முன்
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan