கிவ்வின் புறநகர் பகுதியான இர்பின் “விடுதலை” - உக்ரைன் அரசு அறிவிப்பு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 34 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
ரஷ்யாவின் தாக்குதல்களில் உக்ரைன் வீரர்கள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தலைநகர் கிவ்வின் புறநகர் பகுதியான இர்பின் “விடுதலை பெற்றுள்ளதாக” உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கிவ்வின் புறநகர் பகுதியான இர்பின் “விடுதலை பெற்றுள்ளதாக” உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைன் இராணுவம் தலைநகர் கிவ்வின் புறநகர்ப் பகுதியை ரஷ்யப் படைகளிடம் இருந்து மீட்டுள்ளதாக இர்பின் மேயர் தெரிவித்துள்ளார்.
“இன்று எங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இர்பின் விடுவிக்கப்பட்டது” என்று அதன் மேயர் ஒலெக்சாண்டர் மார்குஷின் தனது டெலிகிராமில் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri