எனக்கு பிள்ளைகள் உள்ளனர்... என்னை காப்பாற்றுங்கள் - கோவிட் நோயாளியின் இறுதித் தருணம்
இலங்கையில் கோவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நபர் ஒருவர் தொடர்பில் சோகமாக செய்தி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நோயாளி தன்னை காப்பாற்றுமாறு வைத்தியர்களிடம் கெஞ்சியுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த நோயாளி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு கோவிட் நோயாளி ஒருவர் வெளியிட்ட பதிவில்,
“மெடம், என்னால் உயிரிழக்க முடியாது. என்னால் சுவாசிக்க முடியாது. என்னை உயிரிழக்க விடாதீர்கள். என்னை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதியுங்கள். எனக்கு சிறு குழந்தைகள் 3 பேர் உள்ளனர். கெஞ்சி கேட்கிறேன் (அதுவரையிலும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது). எனினும் அவ்வாறு கூறிய 42 வயதுடைய தந்தை கடந்த 2 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இவ்வாறான சம்பவத்தில் பாதிக்கப்படும் நபராக நீங்கள் மாறிவிடாதீர்கள். அவதானமாக இருங்கள்.. அவ்வளவு தான்” என அவர் பதிவிட்டுள்ளார்.
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan
லண்டனில் சுற்றுலாப்பயணிகளின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதிக்கும் சீன பாதுகாப்பு அதிகாரிகள் News Lankasri
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam