எரிவாயு வரிசையில் காத்திருந்தபடி அமைச்சர்களிடம் கேள்வி கேட்ட ஊடகவியலாளர்
சமையல் எரிவாயுவை பெறுவதற்காக மக்கள் காத்திருக்கும் நீண்ட வரிசையில் நின்றபடி பத்திரிகையாளர் ஒருவர் அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் வாராந்தர செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமையல் எரிவாயுவை பெறுவதற்காக பொதுமக்கள் காத்திருக்கும் நீண்டவரிசையில் வரிசையில் தனது மடிக்கணிணியுடன் நின்றபடி செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர்களிடம் பத்திரிகையாளர் கேள்விகளை கேட்டுள்ளார்.
அரசாங்கத்திடம் எதிர்கால திட்டம் எதுவும் இல்லையான என பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சரவை பேச்சாளர் வாழ்க்கை செலவு அதிகரிப்பையும் அத்தியாவசிய பொருட்களிற்கான தட்டுப்பாட்டையும் எந்த அரசாங்கமும் விரும்பாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்த அரசாங்கமும் தனது ஆட்சிக்காலத்தில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று துயரடைவதை பார்க்க விரும்பாது என அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.