ஜனாதிபதியை வாழ்த்திய ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்
இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்து பொருளாதாரத்தை நிலைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் வரவேற்கத்தக்கன என ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா (yoko kamikawa) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (04.05.2024) இடம்பெற்ற விசேட சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
"கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) விரிவுபடுத்தல் மற்றும் இலகு தொடருந்து (LRT) திட்டம் ஆகியன ஜப்பான் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்படவிருந்தன.
ஜப்பான் அரசாங்கம்
ஆனால், அவை தற்போது இடைநிறுத்தப்பட்டாலும் குறித்த அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக மீள ஆரம்பிப்பதே ஜப்பான் அரசாங்கத்தின் நோக்கமாகும்.
பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்திற்காக இலங்கையில் மேற்கொள்ளப்படும் புதிய சட்டத்திருத்தங்கள் உள்ளிட்ட சாதகமான நடவடிக்கைகளுக்கும் பாராட்டுக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட வேளையில் ஜப்பான் அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பிற்கும் ஜனாதிபதி நன்றி கூறினார்.
மேலும், வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் உள்ளிட்ட பலர் இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |