போலியான தகவல்களை பரப்பிய விவகாரம்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பிரிவில் கடமையாற்றும் கிராம அலுவலர் ஒருவருக்கு எதிராக பொலிஸ் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலியான பிறப்புச் சான்றிதழ் ஒன்றை தயாரித்து பதிவிட்டமை மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டதொலைபேசி இலக்கங்களை வட்சப் குளுக்களின் ஊடாக இணைத்து போலியான தகவல்களை பரப்பியமை தொடர்பில் குறித்த முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவுக்கு எமது ஊடக பிரிவு தொடர்புகொண்டு கேட்டப்போது, குறித்த முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டது.
முறைப்பாடு பதிவு
தனிநபர் ஒருவரால் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
மேலும், குறித்த கிராமசேவகரின் முகப்புத்த கணக்கு தொடர்பிலும் சர்ச்சைகள் நிலவுவதாகவும், இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
எனினும் குறித்த குற்றச்சாட்டுக்களை கிராமசேவகர் மறுத்து வருவதாகவும் கூறப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


ஜெலென்ஸ்கி சர்வாதிகாரி... உக்ரைன் நாடே மிஞ்சாது: கோபத்தின் உச்சத்தில் டொனால்டு ட்ரம்ப் News Lankasri
