மகனின் உயிரை பறித்த தந்தை வழங்கிய ஊசி மருந்து
காலி, வெலிபத பிரதேசத்தில் வீடொன்றில் தவறான ஊசி மருந்தை வழங்கியதன் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இளைஞனின் தந்தையே ஊசி மருந்தை வழங்கியுள்ளார்.
தந்தை ஓய்வுபெற்ற தாதி அதிகாரி
ஓய்வுபெற்ற தாதி அதிகாரியான தந்தை வழங்கிய ஊசி மருந்து விஷமாகியதில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.
25 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. வழங்கப்பட்ட ஊசி மருந்து காரணமாக ஏற்பட்ட உடல் நிலை பாதிப்பால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரேதப்பரிசோதனை நடத்தாது அடக்கம் செய்யப்பட்ட உடல்
காலி காராப்பிட்டிய வைத்தியசாலைக்கு இளைஞன் கொண்டு செல்லப்பட்ட போது, ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் பிரேதப்பரிசோதனையை நடத்தாது உயிரிழந்த இளைஞனின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கராப்பிட்டிய வைத்தியசாலையின் விடுதி ஒன்றில் இருந்து அனுமதியின்றி பெற்று செல்லப்பட்ட ஊசி மருந்தே இளைஞனுக்கு வழங்கப்பட்டிக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.