இந்திய துணைத்தூதுவர் தலைமையில் யாழில் ஆரம்பமான தூய்மையாக்கும் பணி
சர்வதேச சுழியக் கழிவுதினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண(Jaffna) மாநகரத்தினை தூய்மையாக்கும் பணி நடைபெற்றுள்ளது.
இந்தியத் துணைத் தூதரகம், யாழ்ப்பாண மாநகர சபை, யாழ்ப்பாண பொஸில் நிலையம், வடமாகாண சுற்றுலா சேவை அலுவலகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாநகரத்தினை தூய்மையாக்கும் பணியினை முன்னெடுக்கும் வகையில், ஆரோக்கியமான யாழ் பவனி துவிச்சக்கரவண்டி பயணம் இன்று யாழ்ப்பாணம் ஆரியகுளத்திற்கு அருகாமையில், யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் சந்திரன் கிருஷ்னேந்திரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
தூய்மையாக்கும் திட்டம்
இவ்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி(Sai Murali) கலந்து கொண்டு தூய்மையாக்கும் திட்டத்தினை ஆரம்பித்துவைத்துள்ளார்.
குறித்த ஆரோக்கியமான யாழ் பவனியின் துவிச்சக்கர வண்டி பயணம் யாழ்
ஆரியகுளத்தில் இருந்து ஆரம்பமாகி வேம்படிச்சந்தி, வைத்தியசாலை வீதி மகாத்மா
காந்தி சுற்றுவட்ட வீதி, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கு வீதி, பண்ணை
வீதி, ஊடாக பண்ணை சுற்று வட்ட வீதியுடாக வந்து யாழ்ப்பாணம் பொது நூலகத்தில்
வந்து நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 2ஆம் நாள் - திருவிழா





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
