சஜித் தரப்பின் மாபெரும் போராட்டம்! குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக குறிப்பு வழங்கியவர் கைது
கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக குறிப்பு வழங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு கடதாசியில் குறிப்பை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், கைதுசெய்யப்பட்டவர் மனநலம் குன்றிய சந்தேக நபர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பிரதம பாதுகாப்பு அதிகாரி சம்பந்தப்பட்ட சந்தேகக் குறிப்பு தொடர்பில் கறுவாத்தோட்டப் பொலிஸில் முறைப்பாடு செய்தார்.
இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த குறிப்பைக் கையளித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரின் பையில் இருந்து காகிதங்களில் எழுதப்பட்ட இதே போன்ற பல குறிப்புகளையும் மீட்டதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எந்த சாக்குபோக்கும் சொல்ல முடியாது: பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri