ஐஎம்எப் ஒப்பந்தத்தை ஜனாதிபதி தேர்தல் முடியும்வரை முடிவுக்கு கொண்டுவரப்போவதில்லை: லக்ஸமன் கிரியெல்ல
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை ஜனாதிபதி தேர்தல் முடியும்வரை முடிவுக்கு கொண்டுவரப்போவதில்லை எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸமன் கிரியெல்ல(lakshman kiriella) தெரிவித்துள்ளார்.
நாடளுமன்றத்தில் நேற்றைய தினம் (22.05.2024) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பின் போது பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு
மேலும் உரையாற்றிய அவர்,
75 புதிய சட்டங்கள்
“நாட்டை வங்குராேத்தாக்கிய அரசாங்கத்துக்கு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. அதனால் புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள அரசாங்கம் வழிவிட வேண்டும்.
அரசாங்கம் இந்த காலப்பகுதியில் 75 புதிய சட்டங்களை கொண்டுவந்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்துள்ளார்.
எனிலும், சட்டங்கள் அனுமதிக்கப்பட்டாலும் அவை முறையாக செயற்படுத்தப்படுவதில்லை. கடந்த சில வருடங்களாக அரசாங்கத்துக்கு விராேதமானவர்களுக்கு மாத்திரமே சட்டம் நிலைநாட்டப்படுகிறது.
தற்போதைய பிரதம நீதி அரசர் நல்லாட்சி காலத்தில் சட்டமா அதிபராக இருந்து 42 வழக்குகளை தொடுத்திருந்தார். ஆனால் முன்னால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் வந்த பின்னர் அந்த வழக்குகளுக்கு என்ன நடந்தது என தெரியவில்லை.
[BOJEWIY]
நிலைநாட்டப்படாத சட்டம்
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சாதாரண ஊழியர் ஒருவரை தாக்கியதை அனைவரும் அறிந்துள்ளோம்.
அவர் அவ்வாறு தாக்கியதையும் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருந்தார். ஆனால் இதுவரை அவருக்கு எதிராக சட்டம் நிலைநாட்டப்படவில்லை.
இவ்வாறான சிறிய விடயத்துக்கேனும் அரசாங்கம் சட்டத்தை நிலைநாட்டவில்லை என்றால் ஏனைய விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்திடம் எதனையும் எதிர்பார்க்க முடியாது" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |