அரிசி மாஃபியாவின் முறைகேடான செயற்பாடு: அரசாங்கத்துக்கு விசேட கோரிக்கை
நாட்டில் 04 வகையான அரிசிகளுக்கான விலைக் கட்டுப்பாடுகள் அடுத்த ஆண்டு முதல் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தேசிய அரிசி கைத்தொழில் சம்மேளனத்தின் அருணகாந்த பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களிடம் அரிசிகளுக்கான விலைக் கட்டுப்பாடு தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் நாட்டில் அரிசி மாஃபியா எவ்வாறு செயல்படுகிறது என்பது தொடர்பில் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்.
பிரதான அரிசி ஆலைகள்
“இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, பிரதான அரிசி ஆலைகள் கீரி சம்பா விலையை உயர்த்துகின்றன.

கீரி சம்பாவின் விலை உயர்ந்தவுடன், அடுத்த பருவத்தில் கீரி சம்பாவை சாகுபடி செய்ய விவசாயிகள் முயற்சி செய்கின்றனர்.
விலை குறைவாக இருக்கும்போதே, ஆலை உரிமையாளர்கள் களஞ்சியசாலைகளை நிரப்பி வைத்துவிடுவர். அப்படி நிரப்பி மிக அதிக விலைக்கு விற்பனை செய்வர்.
அதிகாரிகளின் உதவி
இவ்வாறு முக்கிய ஆலை உரிமையாளர்கள் அதிகாரிகளின் உதவியுடன் நிலைமையின் சமநிலையை உடைக்கிறார்கள்.

எனவே இந்த நிலையில் நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே 04 வகை அரிசிகளுக்கும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கட்டுப்பாட்டு விலை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்." என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri