டிசம்பர் ஜனாதிபதி சிந்தனையை மாற்றிக்கொள்ளுங்கள்! ஹரிணி திட்டவட்டம்
ஜனாதிபதியாக வேண்டும் என்ற சிந்தனையில் உள்ளவர்கள் அந்த சிந்தனையை திருத்தம் செய்துகொள்ள வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் காலி முகத்திடலில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்ததாவது,
ஆட்சி அதிகாரத்துடன் மே தின கூட்டம்
“காலி முகத்திடல் இம்முறை மே தின கூட்டத்தால் பெருமையடைந்துள்ளது. 2025ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்துடன் மே தின கூட்டத்தை நடத்துவோம் என்று கடந்த முறை மக்களுக்கு வாக்குறுதி அளித்தோம்.
அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். ஏனைய அரசியல் கட்சிகளின் மே தின கூட்டத்துக்கும் எமது மே தின கூட்டத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகிறது.
பாரிய போராட்டத்துக்கு மத்தியில் ஆட்சியை கைப்பற்றினோம். போராட்டத்தை கொண்டாடும் வகையில் இம்முறை மே தின கூட்டம் அமைந்துள்ளது. எமது மக்கள் அலையை கண்டு எதிர்வரும் ஒகஸ்ட் மற்றும் டிசெம்பர் மாதமளவில் ஜனாதிபதியாக நினைப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது.
ஆகவே ஜனாதிபதியாக வேண்டும் என்ற சிந்தனையில் உள்ளவர்கள் அந்த சிந்தனையை திருத்தம் செய்துகொள்ள வேண்டும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
