கர்ப்பிணியான மனைவியை இடியன் துப்பாக்கியால் சுட்ட கணவர்
கிளிநொச்சி - அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிதாஸ் குடியிருப்பு பகுதியினை சேர்ந்த கணவன், தனது கர்ப்பிணி மனைவியை இடியன் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தியுள்ளார்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (11.04.2023) இடம்பெற்றுள்ளதாக அக்கராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த கர்ப்பிணி பெண் உடனடியாக அக்கராயன்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
சம்பவத்தில் 33 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
கணவன் மது போதைக்கு அடிமையானவர் எனவும், குடும்பத்தில் சண்டைகள் இடம்பெறுவதாகவும், இதன் விளைவாகவே மனைவி மீதான துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அக்கராயன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
