தனக்கு சொந்தமான காணியில் சிறை வைக்கப்பட்ட ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சொந்தமான காணியில் அமைந்துள்ள சிறைச்சாலையில் அவர் சிறை வைக்கப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள 43 ஏக்கர் நிலம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பரம்பரையினருக்கு சொந்தமான காணியாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் வஜிர இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டின் சகல சட்டத்தரணிகளும்
அவர் தொடர்ந்து பேசிய போது. இந்தக் காணி இறுதியில் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு சொந்தமானது.

ரணில் விக்ரமசிங்கவை விடுதலை செய்வதற்காக நாட்டின் சகல சட்டத்தரணிகள் மற்றும் வைத்தியர்கள் விடுமுறையில் வந்து அவரை விடுதலை செய்வதற்காக உதவி செயதனர்.
மேலும் அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அவரை பிணையில் எடுப்பதற்காக செய்த உதவிகளுக்கும் தவிசாளர் வஜிர அபேவர்த்தன நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று வஜிர அபேவர்த்தன அதன் உறுதிப்பத்திரங்களை ஊடகவியலாளர்களுக்கு வழங்கி வைத்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகள்.. ஒரே நாளில் 2 திருமணம்.. Cineulagam
இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனம் சேப்பாக்கம் மைதானத்தில் தெளிப்பு! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்தியா News Lankasri