கொழும்பில் ஏற்பட்ட பதற்றநிலை - பொலிஸ் அதிகாரியின் மனிதாபிமானம்
பத்தரமுல்லை - தியத்த உயன நாடாளுமன்ற நுழைவு வீதிப் பகுதியில் நேற்றைய தினம் பதற்றநிலைமை ஒன்று ஏற்பட்டது.
பெற்றோலிய வளங்களை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து குறித்த பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் அப்பகுதியில் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அரசு எதிராக போராட்டம்
போராட்டக்காரர்கள் பொலிஸாரின் தடுப்பை மீறி முன்னேறிச் சென்றதன் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்ட போது வீதியில் நின்ற சிறுவனை நோக்கி அது சென்றுள்ளது.
இந்த நிலையில் மற்ற பக்கத்தில் நின்ற பொலிஸ் அதிகாரி தான் பாதிக்கப்பட கூடும் என்பதனை குறித்து சிந்திக்காமல் சிறுவனை காப்பாற்ற அவ்விடத்திற்கு சென்றுள்ளார்.
பொலிஸ் அதிகாரியின் மனிதாபிமானம்
அருங்கிருந்த சிறுவனை தூக்கிய நிலையில் பாதுகாப்பான இடம் நோக்கி பொலிஸ் அதிகாரி ஓடிச் செல்லும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
மக்கள் மீது கடும் வெறுப்பை காட்டு பொலிஸாருக்கு மத்தியில் இந்த அதிகாரியின் செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.
சீருடை அணிந்த கொடூரர்களுக்கு மத்தியில் சில நல்லவர்கள் உள்ளனர். பாராட்டுக்கள் என பலர் பதிவிட்டுள்ளனர்.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
