போராட்டக்காரர்களால் கையகப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி மாளிகையின் தற்போதைய நிலை (Video)
இலங்கை ஜனாதிபதிகளின் அதிகாரபூர்வ வதிவிடமும், பணியிடமும் ஜனாதிபதி மாளிகை (President's House) ஆகும்.
இம் மாளிகை இலங்கையில் கொழும்பு கோட்டையில் ஜனாதிபதி மாவத்தையில் அமைந்துள்ளது.
1804 ஆம் ஆண்டு முதல் பிரித்தானிய ஆளுநர்கள், மகா தேசாதிபதிகள், மற்றும் இலங்கை அரசுத்தலைவர்களின் இல்லமாக இருந்து வந்துள்ளது.
1972 ஆம் ஆண்டில் இலங்கை குடியரசாக மாறும் வரை "அரசர் மாளிகை" அல்லது "இராணி மாளிகை" என்று அழைக்கப்பட்டது.
இந்த மாளிகையை 29 ஆளுநர்களும், ஆறு ஜனாதிபதிகளும் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தியுள்ளனர்.
இறுதியாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி மாளிகையை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தி வந்தார்.
கையகப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி மாளிகை
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை அரசியல் நெருக்கடியாக மாறி இலங்கையின் அரசியல் வரலாற்றில் பல்வேறு திருப்புமுனைகளை ஏற்படுத்தியது.
இறுதியாக கடந்த 9ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டு் என வலியுறுத்தி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது போராட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்பட்டது.
தொடர்ந்தும் ஒரு வாரமாக ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களின் வசம் இருக்க பொதுமக்களும் ஜனாதிபதி மாளிகையை சுற்றி பார்க்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் போராட்டக்காரர்களின் வசமிருந்த ஜனாதிபதி மாளிகை நேற்று போராட்டக்காரர்களால் படையினரிடம் கையளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.



