வைரவபுளியங்குளத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர் குழு - இருவர் காயம்
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து கைகலப்பில் ஈடுபட்டதில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள மதுபானசாலையில் மது அருந்தி விட்டு வந்த இளைஞர் குழு ஒன்று மதுபானசாலைக்கு முன்பாக இருந்த வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து அதன் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
மேலும்,அருகில் இருந்த வர்த்தக நிலையங்களில் நின்றோர் மற்றும் வீதியில் நின்றோரையும் அச்சுறுதியுள்ளது. இதன்போது அப்பகுதியில் ஏற்பட்ட அடிதடி மற்றும் கைகலப்பில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 23 மணி நேரம் முன்
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri